எஸ்.ஐ.க்கு பிரிவு உபசார விழா
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.க்கு பிரிவு உபசார விழா நடந்தது.;
எஸ்.ஐ.க்கு பிரிவு
உபசார விழா
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.க்கு பிரிவு உபசார விழா நடந்தது.
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.ஆக பணியாற்றி வந்தவர் தங்கவடிவேல். இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய இவர் தற்போது, எலச்சிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் இவருக்கு இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் பிரிவு உபசார விழா நடந்தது. இன்ஸ்பெக்டர் தவமணி பேசியதாவது:
கேரளா வங்கி ஏ.டி.எம். கொள்ளையர்களை சுட்டு பிடிக்கும் போது, தங்கவடிவேல் மிகுந்த உதவியாக இருந்தார். அவரிடம் கொடுத்த அனைத்து பணிகளையும் சிரமம் பாராமல், செவ்வனே செய்து முடிப்பார். இளமை துடிப்புடன் உள்ள இவர் மென்மேலும் பல சாதனைகள் படைப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
எஸ்.ஐ. தங்கவடிவேல் பேசியதாவது:
ஒரே ஆண்டில் 960க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து, அதனை ஒன்று கூட நிலுவை இல்லாமல் செய்த சாதனை நம் இன்ஸ்பெக்டரை சேரும். வங்கி ஏ.டி.எம். கொள்ளையர்களை சுட்டு பிடித்த சம்பவத்தில் நாட்டையே, நம் ஊரின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இன்ஸ்பெக்டர். அவருடன் பணியாற்றியது மிகப்பெரிய அனுபவம்.
படவிளக்கம் :
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.க்கு பிரிவு உபசார விழா நடந்தது.