குமாரபாளையத்தில் வீட்டில் தூங்கிய நிலையில் போலீஸ் எஸ்.ஐ. உயிரிழப்பு

குமாரபாளையத்தில் வீட்டில் தூங்கிய நிலையில் போலீஸ் எஸ்.ஐ., ஒருவர் உயிரிழந்தார்.;

Update: 2022-02-10 09:00 GMT

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் வட்டமலை டீச்சர்ஸ் காலனியில் வசித்து வருபவர் சஞ்சீவிமூர்த்தி, 56.  இவர், ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார். சில நாட்களாக முதுகு வலியின் காரணமாக டாக்டரின் ஆலோசனை படி விடுப்பு எடுத்து ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு தன் குடும்பத்தினருடன் உணவு அருந்திவிட்டு உறங்கச் சென்றார். நேற்று காலை 07:00 மணியளவில் வீட்டில் உள்ள அனைவரும் எழுப்பியும் அவர் எழுந்திருக்கவில்லை. ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் ஜி.ஹெச். கொண்டு வந்து பார்த்த போது, அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார்.

இது குறித்து குமாரபாளையம் எஸ்.ஐ. மலர்விழி விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

Similar News