3 கிலோ கஞ்சா பறிமுதல்; குமாரபாளையத்தில் இருவர் கைது
குமாரபாளையத்தில் 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.;
3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து இருவரை கைது செய்த போலீசார்
குமாரபாளையத்தில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து இருவரை போலீசார் கைது செய்தனர்.
போனில் வந்த தகவல் படி குமாரபாளையம் எஸ்.ஐ. தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார், இடைப்பாடி சாலை, காவேரி நகர், புதிய காவேரி பாலம் பகுதியில் நேற்று காலை 8 மணியளவில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அவ்வழியாக டூவீலரில் வந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில் அதே பகுதியை சேர்ந்த மதிவாணன், 40, இடைப்பாடி, செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்த மிராண்டா செந்தில், 45, என்பதும், இவர்கள் கஞ்சா விற்பனை செய்ய வந்ததும் தெரியவந்தது.
இவர்களிடமிருந்து 3.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார் குமாரபாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.