கழிவுநீர் பாதையை சேதப்படுத்தியவர்களை தேடும் போலீசார்..!

குமாரபாளையம் அருகே கழிவுநீர் பாதையை சேதப்படுத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை செய்து வருகிறார்கள்.

Update: 2024-08-05 03:48 GMT

கோப்பு படம் -செய்திக்கான மாதிரி படம் 

கழிவுநீர் பாதையை சேதப்படுத்திய நபர்களை தேடும் போலீசார்

குமாரபாளையம் அருகே கழிவுநீர் பாதையை சேதப்படுத்திய நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை செய்து வருகிறார்கள்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, நல்லாம் பாளையம் பகுதியில் தனியார் பிளாட்டிலிருந்து கழிவுநீர் பாதையை பொக்லின் மூலம் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அதே பகுதியை சேர்ந்த கஸ்தூரி மகன் ஜம்பு, aஇந்திராணி கணவர் அவினாசி, பாறைகாடு சேகர், குஞ்சாயி மகன் கார்த்தி, இன்னும் பலர் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரிஜா குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

 __________________________________________

லாரி ஓட்டுநர் மீது போலீசில் புகார் 

குமாரபாளையத்தில் மின் மாற்றி மற்றும் மின் கம்பம் மீது லாரியை ஏற்றியதில், 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக லாரி ஓட்டுனர் மீது மின்வாரிய அதிகாரி புகார் கொடுத்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி, (28). லாரி ஓட்டுனர். குமாரபாளையம் ராஜராஜன் நகர் பகுதியில் மின் வாரியம் சார்பில், சாலையில் வெள்ளை கோடுகள் போட்டுக்கொண்டிருந்தனர். வெள்ளைக்கோடு போட பயன்படுத்திய லாரியை அஜாக்கிரதையாக ஓட்டிச்சென்று சாலையோரம் இருந்த தாழ்வழுத்த மின் மாற்றி மற்றும் மின் கம்பம் மீது மோதியதில் கம்பங்கள் சேதமானது. இதன் சேத மதிப்பு 3 லட்சம் ரூபாய் என மின்வாரிய இளமின் பொறியாளர் ஸ்ரீதர் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்து, திருப்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் கொடுத்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் லாரி ஓட்டுனர் திருப்பதியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News