குமாரபாளையத்தில் போலீஸ் ஏட்டு எஸ்.எஸ்.ஐ. ஆக பதவி உயர்வு
குமாரபாளையத்தில் போலீஸ் ஏட்டு எஸ்.எஸ்.ஐ. ஆக பதவி உயர்வு பெற்றார்.;
எஸ்.எஸ்.ஐ ஆக பதவி உயர்வு பெற்ற நடராஜன்.
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் நடராஜன். இவர் பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, பணி உயர்வாக எஸ்.எஸ்.ஐ. பதவி உயர்வு பெற்றார்.
இவருக்கு திருச்செங்கோடு டி.எஸ்.பி. சீனிவாசன், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ.க்கள் நந்தகோபால், மலர்விழி உள்ளிட்ட எஸ்.எஸ்.ஐ-க்கள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.