குமாரபாளையத்தில் சூர்யா படங்கள் ஓடும் தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
குமாரபாளையத்தில் சூர்யா நடித்த படங்கள் ஓடும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.;
குமாரபாளையத்தில் சூர்யா நடித்த படங்கள் ஓடும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கலாநிதி மாறன் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்திற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த படங்கள் ஓடும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, குமாரபாளையத்தில் ராஜம், லட்சுமி ஆகிய இரு தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.