குமாரபாளையம் பைபாஸ் சாலையில் விபத்து

குமாரபாளையம் பைபாஸ் சாலையில் ஏற்பட்ட விபத்தில் இருவருக்கும் கால்கள் முறிவு ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.;

Update: 2021-06-21 11:24 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கௌரி தியேட்டர் எதிரே, இன்று பகலில், பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனமும் கண்டெய்னர் லாரியும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து விசாரணை செய்துவரும் குமாரபாளையம் காவல்துறையினர், விபத்தில் அடிபட்ட இருவரும் திருவண்ணாமலையில் இருந்து கோவைக்கு சென்று கொண்டு இருக்கும்போது, குமராபாளையம் பைபாஸில் கண்டெய்னர் லாரி மீது எதிர்பாராவிதமாக மோதி விபத்துக்குள்ளானதை கண்டறிந்துள்ளனர். இந்த விபத்து குறித்து, தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்தினால் குமாரபாளையம் பைபாஸ் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News