பள்ளிப்பாளையத்தில் வெளியே சுற்றியவர்களுக்கு காவல் ஆய்வாளர் அறிவுரை

பள்ளிப்பாளையத்தில் முழு ஊரடங்கின் போது வெளியே சுற்றியவர்களுக்கு காவல் ஆய்வாளர் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.

Update: 2021-05-11 10:15 GMT

கொரோனா தொற்று அலை2 மிக வேகமாக தமிழகம் முழுவதும் பரவி வரும் சூழலில் தமிழக அரசு இரண்டு வாரங்களுக்கு முழுமையான ஊரடங்கை அறிவித்திருந்தது அதன்படி பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை தவிர வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என தெரிவிக்கபட்டது.

இந்தநிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிலையப் பகுதியில் ஊரடங்கு காலத்தில் ஏராளமானவர்கள் தேவையின்றி வாகனத்தில் சுற்றுவதாக பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு தகவல் வரவே உடனடியாக பேருந்து நிலையப் பகுதிக்கு வந்தார் ஆய்வாளர்.

சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களை மடக்கிப்பிடித்து அவர்களை வரிசையாக நிற்க வைத்து கொரோனா தொற்று அபாயத்தையும் ஊரடங்கு பற்றிய அவசியத்தை எடுத்துக்கூறி தேவையின்றி ஊரடங்கு காலத்தில் மீண்டும் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரைகளை வழங்கினார் உடன் பள்ளிபாளையம் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்!

Tags:    

Similar News