குமாரபாளையம் அரசு கல்லூரியில் போலீசார் நடத்திய விழிப்புணர்வு முகாம்

குமாரபாளையம் அரசு கல்லூரியில் போலீசார் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2022-05-03 00:30 GMT

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போலீசார் சார்பில் நடந்த விழிப்புணர்வு முகாமில்,  குமாரபாளையம் எஸ்.ஐ. மலர்விழி பேசினார்.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போலீசார் சார்பில் விழிப்புணர்வு முகாம், கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடைபெற்றது. இதில் குமாரபாளையம் எஸ்.ஐ. மலர்விழி பங்கேற்று விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தார். 

அவர் பேசியதாவது: மாணவியர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். மிரட்டல் விடுக்கும் நபர்களிடம் எதிர்த்து நில்லுங்கள். சந்தேகப்படும் படியான நபர்கள் குறித்து போலீசுக்கு தகவல் தெரியப்படுத்துங்கள். குறிப்பிட்ட எண்களை வைத்துக்கொண்டு போன் மூலம் தகவல் தெரிவித்தால் 24 மணி நேரமும் போலீசார் உங்களுக்கு உதவ தயாராக உள்ளனர். பைக், கார், உள்ளிட்ட வாகனங்களை கொண்டு வந்து பேசும் டிப்டாப் அசாமிகளிடம் அவர்களை நம்பி பேசி, ஏமாந்து விடாதீர்கள் என்றார். 

பேராசிரியர்கள் ரகுபதி, ரமேஸ்குமார், கீர்த்தனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கல்லூரி மாணவியர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News