குமார பாளையம் அருகே முதியவர் இறப்பு பற்றி போலீசார் விசாரணை
ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முதியவர் இறப்பு பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கல்லங்காட்டு வலசு பகுதியில் வசித்து வந்தவர் முருகேசன்,(வயது60,). இவரது மனைவி பேச்சியம்மாள்(வயது 53.). கூலித்தொழிலாளிகள். முருகேசன் 8 ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தாரை பிரிந்து தனியே சென்று விட்டார். உடல்நலம் சரியில்லாத நிலையில் சில நாட்கள் முன்பு குடும்பத்தாரை நாடி வந்துள்ளார். இவரை பேச்சியம்மாள் மற்றும் மகன் சூர்யா (வயது 22,) இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 06:00 மணியளவில் உயிரிழந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.