டூவீலர் வாங்கி தராததால் விஷமருந்திய வாலிபர் பலியானார்
குமாரபாளையத்தில் டூவீலர் வாங்கி தராததால் விஷமருந்தி வாலிபர் பலியானார்.;
குமாரபாளையம் அருகே ஒட்டன்கோவில் பகுதியில் வசிப்பவர் சரஸ்வதி, 37. இவரது கணவர் சில ஆண்டுகள் முன்பு இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் இருந்தனர். இவரது மகன் பூபேஸ், வயது 18, 10ம் வகுப்பு படித்து விட்டு லாரி கிளீனர் மற்றும் கூலி வேலை செய்து வந்துள்ளார். தன் அம்மாவிடம் ஏப். 3ல் டூவீலர் வாங்கி தர கேட்டுள்ளார். பணம் வந்ததும் வாங்கி தருவதாக கூற, ஆத்திரத்தில் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மயக்கமடைந்த இவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை 04:30 மணியளவில் இறந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.