குமாரபாளையம் அரசு கல்லூரியில் 500 மூலிகைச் செடிகள் நடும் விழா
குமாரபாளையம் அரசு கல்லூரியில், அரசு சித்த மருத்துவ பிரிவு சார்பில் 500 மூலிகை செடிகள் நடும் விழா நடைபெற்றது.;
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த விழாவில் சித்தா டாக்டர் சுந்தரவடிவேல் பங்கேற்று மூலிகை செடிகளை நட்டு பணிகளை துவக்கி வைத்தார்.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி அரசு சித்த மருத்துவ பிரிவு சார்பில் 500 மூலிகை செடிகள் நடும் விழா குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் இரகுபதி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக டாக்டர் சுந்தரவடிவேல் பங்கேற்று மூலிகை செடிகள் நடும் விழாவை துவக்கி வைத்தார்.
இதையடுத்து வீடுதோறும் மூலிகை செடிகளை பொதுமக்களுக்கு வழங்கி, அதனை நடவு செய்து பராமரிக்க செய்யும் விதமாக விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. திருவள்ளுவர் நகர், வாசுகி நகர், நடராஜா நகர், கம்பன் நகர் உள்ளிட்ட பல இடங்களில் மூலிகை செடிகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர்கள் பாபு ராதாகிருஷ்ணன், சுகந்தி, முரளிகுமார், சிதம்பர லட்சுமி, அமுத லட்சுமி, அருள் நந்தினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.