சார்பு நீதிமன்றம் அமைக்க இடத்தை பார்வையிட்ட மாவட்ட நீதிபதி!

குமாரபாளையத்தில் சார்பு நீதிமன்றம் அமைக்க இடம் மாவட்ட நீதிபதி இடம் பார்வையிட்டார்.;

Update: 2024-09-13 13:45 GMT

குமாரபாளையத்தில் சார்பு நீதிமன்றம் அமைக்க நகராட்சிக்கு சொந்தமான நடராஜா மற்றும் அண்ணா திருமண மண்டபத்தை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி பார்வையிட்டார்.

சார்பு நீதிமன்றம் அமைக்க இடத்தை பார்வையிட்ட மாவட்ட நீதிபதி

குமாரபாளையத்தில் சார்பு நீதிமன்றம் அமைக்க இடத்தை மாவட்ட நீதிபதி இடம் பார்வையிட்டார்.

குமாரபாளையம் புதிய தாலுக்காவாக அறிவிக்கப்பட்டு 2020, ஜூலை 18ல் பள்ளிபாளையம் சாலை, எம்.ஜி.ஆர். நகர் பஸ் நிறுத்தம் அருகே வாடகை கட்டிடத்தில் நீதிமன்றம் துவக்கப்பட்டது. இதில் மாவட்ட குற்றவியல் நீதி மன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. சார்பு நீதிமன்றம் அமைப்பதற்காக இடம் தேடி வந்தனர். குமாரபாளையம் தற்காலிக தாலுக்கா அலுவலகம், நகராட்சிக்கு சொந்தமான அண்ணா திருமண மண்டபத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது புதிய தாலுக்கா அலுவலகம் கட்டப்பட்டு அங்கு இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது அண்ணா திருமண மண்டபம் காலியாக உள்ளது.


ஆகவே சார்பு நீதிமன்ற கட்டிடம் அமைக்க இந்த மண்டபத்தையும், நகராட்சிக்கு சொந்தமான நடராஜா திருமண மண்டபத்தையும் மாவட்ட நீதிபதி குருமூர்த்தி நேற்று நேரில் பார்வையிட்டார். இதில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாலதி, குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சரவணராஜன், செயலர் நடராஜன், பொருளர் நாகப்பன், துணை செயலர் ஐயப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

Similar News