பாதுகாப்பு தடுப்புமின்றி குழாய் சீரமைப்பு பணியால் விபத்து அபாயம்

குமாரபாளையத்தில், எவ்வித பாதுகாப்பு தடுப்பும் இல்லாமல் குழாய் சீரமைப்பு பணிகள் நடப்பதால், பொதுமக்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.;

Update: 2021-11-25 03:00 GMT

குமாரபாளையத்தில், பாதுகாப்பு தடுப்புகள் எதுவுமின்றி மேற்கொள்ளப்படும் குழாய் சீரமைப்பு பணி.

குமாரபாளையம்,  இடைப்பாடி சாலை பூங்கா அருகே, குடிநீர் குழாய் பழுது ஏற்பட்டது. அதனை சரி செய்ய, அங்கு பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு,  பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிக அளவில் போக்குவரத்து மிகுந்த சாலையில்,  இந்த பள்ளத்தை சுற்றி எவ்விதமான பாதுகாப்பு தடுப்புகளோ, பணி நடப்பது குறித்த அறிவிப்புகளோ இல்லை.

இதனால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பாதசாரிகள், குழியில் தவறி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பு,  இந்த இடத்தில் தடுப்புகளை அமைத்து, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பணிகளை மேற்கொள்ள  வேண்டும் என்று,  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Tags:    

Similar News