புறவழிச்சாலையில் மயங்கி சிகிச்சை பெற்ற மாற்றுத்திறனாளி இறந்தார்
குமாரபாளையம் அருகே மாற்றுத்திறனாளி புறவழிச்சாலையில் மயங்கி விழுந்து பலியானார்.;
குமாரபாளையம் அருகே மாற்றுத்திறனாளி புறவழிச்சாலையில் மயங்கி விழுந்து பலியானார்.
குமாரபாளையம், பெருமாபாளையம் புதூரில் வசிப்பாவர் சந்திரசேகர்(36) மாற்றுத்திறனாளி. இவருக்கு ராதிகா(33) என்ற பி.ஏ.,பி.எட், படித்த மனைவியும், கீர்த்திவாசன், சத்வி என்ற மகன், மகள் உள்ளனர். இவர்கள் பொறி, சிப்ஸ் ஆகியவைகளை பேக்கட் செய்து விற்பனை செய்து வந்தனர்.
உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை டெலிவரி செய்ய மார்ச் 6ம் தேதி காலை 7 மணிக்கு தனது ஸ்கூட்டி பெப் என்ற டூவீலரில் சென்றார். வெகு நேரமாகியும் வீடு வராததால், ராதிகா, அவரது கணவருக்கு மொபைல் போனில் அழைக்க, அதை எடுத்த நபர் உங்கள் கணவர் பைபாஸ் சாலையில் மயங்கிய நிலையில் உள்ளார்,என்று கூறினார். உடனே கோட்டைமேடு பகுதிக்கு ராதிகா சென்று, அவரை சேலம் தனியார் மருத்துவமனை மற்றும் சேலம் ஜி.ஹெச்.இல் சிகிச்சைக்கு சேர்த்தார்.
சிகிச்சையில் இருந்த சந்திரசேகர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.