மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்..!
பள்ளிபாளையத்தில் ஜன. 27ல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கவுள்ளது.;
ஜன. 27ல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கவுள்ளது.
பள்ளிபாளையத்தில் ஜன. 27ல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கவுள்ளது.
இது குறித்து குமாரபாளையம் தாசில்தார் சண்முகவேல் தமது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
பள்ளிபாளையம் ஜி.வி. மகாலில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஜன. 27ல் காலை 09:00 மணி முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கவுள்ளது.
இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், தேசிய அடையாள அட்டை பதிவேற்றம் செய்தல், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற நடவடிக்கை எடுத்தல், 18 வயதிற்குட்பட்டோருக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்க விண்ணப்பங்கள் பெறுதல், மருத்துவ உதவி பெற முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயன் பெற நடவடிக்கை எடுத்தல், சுய தொழில் புரிவோர், பணிக்கு செல்வோர், மற்றும் கல்வி பயில்வோர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்க நடவடிக்கை எடுத்தல், ஆதார் அட்டை பெற நடவடிக்கை எடுத்தல், இணைய வழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வழிவகை செய்தல், புதிய வங்கி கடன் கிடைக்க வழிவகை செய்தல் என்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
நலத்திட்ட உதவிகள் பெற தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், 5 புகைப்படம், ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்க வேண்டுகிறோம். இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.