குமாரபாளையம் அம்மன் நகரில் சாலை அமைக்க கோரி நகராட்சி தலைவரிடம் மனு

குமாரபாளையம் அம்மன் நகர் சாலை அமைப்பதில் மீண்டும் இழுபறி ஏற்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி தலைவரிடம் மனு கொடுத்தனர்.;

Update: 2023-12-04 12:43 GMT

குமாரபாளையம் அம்மன் நகர் சாலை அமைப்பதில் மீண்டும் இழுபறி ஏற்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி தலைவரிடம் மனு கொடுத்தனர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அம்மன் நகர் சாலை அமைப்பதில் மீண்டும் இழுபறி ஏற்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி தலைவர் விஜய் கண்ணனிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 20 ஆண்டுகளாக குமாரபாளையம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட நாராயண நகர், அம்மன் நகர் பகுதியில் சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக, மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் மிக மோசமான நிலையில் இருந்தது. தற்சமயம் இந்த சாலை அமைக்க நகர மன்ற தலைவரால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கியது.

இருந்தாலும் அந்த பகுதி பொதுப்பணித்துறையிடம் இருந்ததால், நகராட்சிக்கு பாத்தியப்பட்ட இடத்தில் முழுமையாக சாலை அமைக்க தொடர்ந்து இடையூறாக இருந்ததாக கூறப்பட்டு, இதனால் சாலை குறுகலாக அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தொழிற்சாலைகள் மிகுந்த அந்த பகுதியில், ஓர் இடத்தில் அகலமாகவும், ஒரு இடத்தில் குறுகலாகவும் போட்டால், லாரி, டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர மிகவும் இடையூறாக இருக்கும். எனவே அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News