குமாரபாளையம் நகர எல்லைக்குள் தலைமை அஞ்சல் நிலையம் அமைக்க கோரி மனு

குமாரபாளையம் நகர எல்லைக்குள் தலைமை அஞ்சல் நிலையம் அமைக்க கோரி தாசில்தாரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

Update: 2024-09-30 13:30 GMT

குமாரபாளையம் நகர எல்லைக்குள் தலைமை அஞ்சல் நிலையம் அமைக்க கோரி தாசில்தார் சிவகுமாரிடம் மனு வழங்கப்பட்டது.

குமாரபாளையம் நகர எல்லைக்குள் தலைமை அஞ்சல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரி  தாசில்தாரிடம் மனு வழங்கப்பட்டது.

குமாரபாளையம் காவல்நிலையம் பின்புறம் நகராட்சி 17வது வார்டில் தலைமை அஞ்சல் நிலையம் ஜே. கே. கே. ரோட்டில் செயல்பட்டு வந்தது. தற்போது பள்ளிப்பாளையம் செல்லும் சாலையில் அந்த தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆனால் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள்,மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் தபால் நிலையத்திற்கு செல்வது மிகவும் சிரமமாக இருக்கிறது.

பேருந்தில் பயணம் செய்து போனாலும் பேருந்து நிறுத்தத்திலிருந்து மீண்டும் 1 கி மீ தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி தலைமை அஞ்சல் அலுவகத்தை நகர மையப்பகுதிக்குள் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம். குமாரபாளையம் காவல் நிலையம் பின்புறம் நகராட்சிக்கு சார்ந்த கட்டிடத்தில் சிறப்பு நில அளவை திட்ட அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது அலுவலகம் காலி செய்யப்பட்டு கட்டிடம் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

எனவே காலியாக உள்ள கட்டிடத்தில் குமாரபாளையம் தலைமை அஞ்சலகம் கொண்டு வருவதற்கு ஆவணம் செய்யக்கோரி மக்கள் நீதி மய்யம் மாவட்ட அமைப்பாளர் சித்ரா தலைமையில் குமாரபாளையம் தாசில்தார் சிவகுமாரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதில் பிரகாஷ் அன்பழகன், கீர்த்திகா, சுந்தரராஜன், கணேசன், மாதேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News