டீக்கடையில் மது குடிக்க அனுமதித்தவர் கைது
குமாரபாளையத்தில் டீக்கடையில் மது குடிக்க அனுமதித்த ஒருவர் கைது செய்யபட்டார்.;
குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் டீக்கடையில் மது குடிக்க அனுமதிக்கப்பட்டு வருவதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இது குறித்து தகவலறிந்த எஸ்.ஐ. மலர்விழி நேரில் சென்று மறைந்து நின்று பார்த்த போது, டீக்கடையில் மது குடிக்க அனுமதித்தது தெரியவந்தது.
கடையில் மது குடிக்க அனுமதித்த மோகன் என்பவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்