பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
குமாரபாளையத்தில் பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
குமாரபாளையத்தில் பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
குமாரபாளையம் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட காப்பாளர் கேப்டன் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.நகர செயலர் வடிவேல் வரவேற்றார்.
திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று பேசியதாவது:. பிராமணர்களுக்கு ஒரு நீதி, சூத்திரர்களுக்கு ஒரு நீதி என்பது முரண்பாடானது. பிறவியினால்தான் ஏற்படுகின்றது என்று சொல்லும்படியான சாதியை அடியோடு அழித்து எல்லா மக்களையும் ஒன்று சேர்த்து ஒற்றுமையையும், சகோதரத் தன்மையையும் உண்டாக்க வேண்டும் என்ற கொள்கை பிடிப்புடன் தன் வாழ்நாள் முழுவதும் பெரியார் பாடுபட்டார் என்றார் அவர்.
புதுவை விடுதலைகுரல் கலைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.வாசக பலகை திறப்பு, அண்ணா, காமராசர், பெரியார் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்தல், இரு சக்கர வாகனப்பேரணி நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் நகர தலைவர் தண்டபாணி திராவிடமணி, ரேணுகா, கார்த்திக், பரிமளா, மணியம்மை, செல்வம், உள்பட பலர் பங்கேற்றனர்.