குமாரபாளையத்தில் பெரியாரின் நினைவுநாள் கடைபிடிப்பு
குமாரபாளையத்தில், திராவிடர் கழகம் சார்பில் பெரியார் நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்டது.;
குமாரபாளையத்தில் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்டது.
குமாரபாளையத்தில், திராவிடர் கழகம் சார்பில், பெரியார் நினைவு நாள் நகர தலைவர் சரவணன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது. வாரச்சந்தை அருகே கட்சி அலுவலகத்தில், பெரியார் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
சிறப்பு அழைப்பாளாராக பங்கேற்ற மாவட்ட தலைவர் குமார், பெரியாரின் பெருமைகள் குறித்தும், அவர் செய்த சமூக சீர்திருத்தங்கள் குறித்தும், நாட்டின் வளர்சிக்கு அவரது உழைப்பை பற்றியும் எடுத்துரைத்தார். நகர செயலர் காமராஜ், மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர், மாவட்ட துணை செயலர் பொன்னுசாமி உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.