கலெக்டர் தலைமையில் பேரிடர் மீட்பு செயல்முறை விளக்க முகாம்

குமாரபாளையம் காவிரி கரை பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டால் பாதிக்கக் கூடிய பொதுமக்களை மீட்பது குறித்து, கலெக்டர் தலைமையில் செய்முறை விளக்க முகாம் நடந்தது.;

Update: 2025-05-15 13:50 GMT

கலெக்டர் தலைமையில் பேரிடர் மீட்பு செயல்முறை விளக்க முகாம்

குமாரபாளையம் காவிரி கரை பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டால் பாதிக்கக் கூடிய பொதுமக்களை மீட்பது குறித்து வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை மருத்துவத்துறை மற்றும் இதர துறை அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து, கலெக்டர் தலைமையில் செய்முறை விளக்க முகாம் நடந்தது.

குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியாகும். கர்நாடகா மாநிலத்தில் பருவ மழையின் பொழுது, அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியதும், காவிரியில் உபரி நீர் அதிகபட்சமாக 2.5 லட்சம் கன அடி வரை தண்ணீர் காவிரியில் திறந்து விடப்படுவதால், குமாரபாளையம் பள்ளிபாளையம் காவிரி கரையோர குடியிருப்புகளில் உள்ள பொதுமக்கள் வெள்ள அபாயங்களை சிக்கிக் கொள்கின்றனர். அது போன்ற காலங்களில் தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற செயல்முறை விளக்கம் குமாரபாளையம் பாலக்கரை காவிரி ஆற்றுப்பகுதியில் செய்முறை விளக்கம், மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் செய்து காட்டப்பட்டது. அப்பொழுது குமாரபாளையம் வட்டாட்சியர் சிவக்குமார் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை முதலில் குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பது போலவும், அதனை தொடர்ந்து அவர்கள் காவிரிக்கரை பகுதிக்கு விரைந்து வந்து, அபாய எச்சரிக்கை விடுத்ததுடன், உடனடியாக தீயணைப்புத் துறையினரை வரவழைத்து, காவிரி ஆற்றில் சிக்கியவர்களை பாதுகாப்பாக தீயணைப்புத் துறையினர் வெளியேற்றுவது போலவும், செய்து காட்டினர். காவிரி ஆற்றில் சிக்கிக் கொண்டவர்களை பரிசல் மூலம் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்த்து, அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது? என்பது குறித்தும் செய்முறை நிகழ்ச்சி நடத்தி காட்டப்பட்டது. தொடர்ந்து காவேரி கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்ததுடன், அவர்களுக்கு உணவு, மருத்துவ சிகிச்சை அனைத்தும் வழங்கப்பட்டதா? எனவும், முகாம்களில் தங்கி இருந்தவர்களை கேட்டு தெரிந்து கொண்டார். புயல் காற்றில் சாலைகளில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டால், அந்த மரங்களை உடனே இயந்திரங்கள் கொண்டு அறுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் அப்புறப்படுத்தினர். நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்ட தீயணைப்புத்துறை, மருத்துவத் துறை, காவல்துறை, வருவாய்த் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினரை கலெக்டர் உமா பாராட்டினார். இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ.க்கள் நடராஜன், பிரபாகரன், ஜி.எச். தலைமை டாக்டர் பாரதி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் நடராஜன், மாவட்ட தலைமை தீயணைப்பு படை அலுவலர் செந்தில்குமார், குமாரபாளையம் தீயணைப்பு படை அலுவலர் ஜெயச்சந்திரன், உதவி அலுவலர் தண்டபாணி, உள்பட பலர் பங்கேற்றனர்.

படவிளக்கம் : 

குமாரபாளையம் காவிரி கரை பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டால், பாதிக்கக்கூடிய பொதுமக்களை மீட்பது குறித்து கலெக்டர் தலைமையில் செய்முறை விளக்க முகாம் நடந்தது.

Similar News