குமாரபாளையத்தில் பா.ஜ.க.சார்பில் மக்கள் மருந்தகம் 3-ம் ஆண்டு துவக்க விழா

குமாரபாளையத்தில் பா.ஜ.க.சார்பில் மக்கள் மருந்தகம் 3-ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.

Update: 2022-03-06 14:15 GMT


குமாரபாளையத்தில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற  மூன்றாம் ஆண்டு மக்கள் மருந்தக துவக்க விழாவில் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடியால் 2 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்கள் மருந்தகம் என்ற மலிவு விலை மருந்தகங்கள் துவக்கப்பட்டன. நாமக்கல் மாவட்டம்  குமாரபாளையத்தில் நேற்று 3ம் ஆண்டு மக்கள் மருந்தக துவக்க நாள்  கடைபிடித்து பா.ஜ.க.வினர் விழாவாக கொண்டாடினர். இதில் நகர பொது செயலர் சுகுமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளாராக மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி பங்கேற்று வாழ்த்தி பேசினார்.

அவர் பேசும்போது பொதுமக்கள் பலன் பெறும் வகையில் பிரதமர் மோடியால் எண்ணற்ற திட்டங்கள் துவக்கப்பட்டன. இந்த மக்கள் மருந்தகம் மூலம் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பயன்பெற்று வருகிறார்கள். ஆயுசுமான் பாரத் என்ற திட்டத்தின் மூலம் எண்ணற்ற அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இது போன்ற திட்டங்களை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள் என்றார்.

இதில் மாவட்ட பொது செயலர் நாகராஜ், நிர்வாகிகள் ராம்குமார், துபாய் கணேஷ், மாவட்ட மகளிரணி செயலர் வாணி, நகர மகளிரணி கவுரி சித்ரா, இந்திரா, மாவட்ட மருத்துவ பிரிவு செயலர் தினேஷ்குமார், மருந்தாளுனர் மோகன், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ரவிக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகிய பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது.

Tags:    

Similar News