குமாரபாளையம் அருகே மக்கள் நாடாளுமன்ற கூட்டம்

குமாரபாளையம் அருகே மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது.;

Update: 2021-08-28 16:00 GMT

குமாரபாளையம் அருகே கத்தேரி ஊராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே கத்தேரி ஊராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது.

இதில், மத்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும்,

அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், மக்கள் அதிகம் கூடும் கத்தேரி பஸ் நிறுத்தம் பகுதியில் மக்கள் நாடாளுமன்றம் என்ற பெயரில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பெஞ்சமின் தலைமை வகித்தார். மக்கள் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நாடாளுமன்றத்தில் விவசாய அமைச்சர், சபாநாயகர் பதவியேற்பு விழா நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவாசாயிகளுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டன.

Tags:    

Similar News