குமாரபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம்

குமாரபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2021-09-01 14:15 GMT

 குமாரபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற மக்கள் நாடாளுமன்றத்தில் வக்கீல் கார்த்தி பேசினார். (பள்ளிபாளையம் பிரிவு சாலை)

குமாரபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்  கூட்டம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நகர செயலர் கேசவன் தலைமையில் நடைபெற்றது.

விவசாயிகள் போராட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பெகாஸ்கு மூலம் ஒட்டுக்கேட்பு, கார்பொரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள், ரயில், வங்கி, காப்பீடு, ராணுவ தொழிற்சாலை தனியாருக்கு தருவது,

நாடாளுமன்ற நெறிமுறைகளை உடைத்து சிதைத்து வருதல் ஆகியவற்றை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றபட்டது.

மத்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நாடாளுமன்றத்தில் விவசாய அமைச்சர், சபாநாயகர் பதவியேற்பு விழா நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவாசாயிகளுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டன.

மாநில நிர்வாகி மணிவேல், தி.மு.க. நகர பொறுப்பாளர் செல்வம், காங்கிரஸ் கட்சி நகர செயலர் ஜானகிராமன், உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News