புதிய இன்ஸ்பெக்டருக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து!
குமாரபாளையத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள இன்ஸ்பெக்டர் தவமணிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் வாழ்த்து தெரிவித்தனர்.;
புதிய இன்ஸ்பெக்டருக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து
குமாரபாளையத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள இன்ஸ்பெக்டர் தவமணிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் வாழ்த்து தெரிவித்தனர்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி பணியிட மாறுதலில் தர்மபுரி மாவட்டம், தேன்கனிக்கோட்டைக்கு சென்றார். நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் இன்ஸ்பெக்டராக இருந்த ராமகிருஷ்ணன், குமாரபாளையம் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். தேர்தல் முடிந்த நிலையில் போலீஸ் அதிகாரிகள் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். இதில் குமாரபாளையம் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய தவமணி, தேன்கனிக்கோட்டையிலிருந்து, குமாரபாளையம் இன்ஸ்பெக்டராக மீண்டும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். குமாரபாளையம் இன்ஸ்பெக்டராக இருந்த ராமகிருஷ்ணன் நாமக்கல் மாவட்டம் வேலூர் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார். இன்ஸ்பெக்டர் தவமணிக்கு பல தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட செயலர் காமராஜ் தலைமையில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா, நிர்வாகிகள் மல்லிகா, உஷா, சொர்ணாம்பாள், யோகராஜ், அன்பழகன், வெங்கடேஷ் உள்பட பலர் இன்ஸ்பெக்டர் தவமணியை நேரில் சந்தித்து,
பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது லாட்டரி விற்பனை, கள்ள சந்தையில் மது விற்பனை, முக்கிய சாலைகளில் சில்லி சிக்கன் கடைகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
குமாரபாளையத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள இன்ஸ்பெக்டர் தவமணிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் வாழ்த்து தெரிவித்தனர்.