பணத்தை ஏமாற்றியவர் வீட்டின் முன் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
குமாரபாளையத்தில் பணத்தை ஏமாற்றியவர் வீட்டின் முன் மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டனர்.;
குமாரபாளையத்தில் பணம் ஏமாற்றியதாக கூறப்படும் நபரின் வீட்டின் முன் மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டனர்.
குமாரபாளையத்தில் பணம் ஏமாற்றியதாக கூறப்படும் நபரின் வீட்டின் முன் மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டனர். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பழனிவேல் கூறுகையில், குமாரபாளையம் கே.ஒ.என்.தியேட்டர் அருகே விசைத்தறி பட்டறை வைத்து தொழில் செய்து வந்த செந்தில்குமார், 38, உடையார்பேட்டை பகுதியில் வசிக்கும் சுரேஷ், என்ற மாற்றுத்திறனாளிக்கு 6 விசைத்தறிகளை வாடகைக்கு விட்டிருந்தார்.
இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷ் தனது தொழிலை நிறுத்தும் நிலை உருவானது. இதற்காக முன் பணமாக குறிப்பிட்ட தொகையினை செந்தில்குமார் வசம் சுரேஷ் கொடுத்ததாகத் தெரிகிறது. அந்த தொகையை செந்தில்குமார் திருப்பி தராததால், சுரேஷ் குமாரபாளையம் போலீசார் மற்றும் மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் மனு கொடுத்திருந்தார்.
பட்டறையை சுரேஷ் பூட்டி வைத்திருந்த நிலையில், பூட்டை உடைத்து செந்தில்குமார் தறிகளை விற்றதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசில் சொல்லி பலனில்லாததால் செந்தில்குமார் வீட்டை 40க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
செந்தில்குமார் ஊரில் இல்லை என்றும், அவர் வந்ததும் பணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி கூறியதால் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.