மேம்பாலம் அமைக்கும் இடத்தில் சர்வீஸ் சாலையில் மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை

குமாரபாளையம் புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் அமைக்கும் இடத்தில் சர்வீஸ் சாலையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2024-06-05 14:15 GMT

படவிளக்கம் :

குமாரபாளையம் கத்தேரி பிரிவு சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்லும் வழியில் மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

 மேம்பாலம் அமைக்கும் இடத்தில் சர்வீஸ் சாலையில் மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை

குமாரபாளையம் புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் அமைக்கும் இடத்தில் சர்வீஸ் சாலையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் கத்தேரி பிரிவு பகுதியில் அன்றாட வேலைக்கு செல்பவர்கள், வட்டமலை, எதிர்மேடு பகுதியில் உள்ள எண்ணற்ற கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர், சேலம் கோவை புறவழிச்சாலையை கடந்து சென்று வந்தனர். இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலரும் உயிரிழந்து வந்தனர். இதனை தடுக்க இந்த இடத்தில் மேல்பாலம் அமைக்க பல்வேறு தரப்பினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். இதன் பலனாக இங்கு மேம்பாலம் கட்டும் பணி துவங்கி துரிதமாக நடந்து வருகிறது.

இதற்காக சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. ஆனால் கத்தேரி பிரிவு சர்வீஸ் சாலை வளைவு பகுதியில் பிளெக்ஸ் பேனர்கள், கொடிக்கம்பங்கள், கடை விளம்பரங்கள் என ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால், வாகனங்கள் செல்ல பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் நின்று ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கால விரயம், எரிபொருள் விரயம் ஏற்படுகிறது. குமாரபாளையம் ஜவுளி உற்பத்திக்கு தேவையான நூல்களை ஏற்றி வரும் லாரிகள், இதர கடைகளுக்கு சாமான்கள் ஏற்றிவரும் சரக்கு வாகனங்கள், சேலம், திருச்செங்கோடு, சங்ககிரி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் பேருந்துகள் குமாரபாளையம் நகரிலிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள், என பலதரப்பட்ட வாகனங்கள் செல்ல பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் இந்த சர்வீஸ் சாலைகளில் மின் விளக்குகள் இல்லாததால், சாலையின் மேடு பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறி வருகிறார்கள். வாகன விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் கத்தேரி பிரிவு சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்லும் வழியில் மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News