இந்துக்கள் பகுதியில் மசூதி : பொதுமக்கள் எதிர்ப்பு..!

குமாரபாளையம் அருகே இந்துக்கள் பகுதியில் மசூதி கட்ட அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.;

Update: 2024-09-21 10:14 GMT

மசூதி கட்டுமானப் பணி

இந்துக்கள் பகுதியில் மசூதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

குமாரபாளையம் அருகே இந்துக்கள் பகுதியில் மசூதி கட்ட அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குமாரபாளையம் சேலம் சாலை பஸ் ஸ்டாண்ட் எதிரில் தி.மு.க. அலுவலகம் செல்லும் வழியில் முஸ்லிம் மயானம் உள்ளது. இங்கு மசூதி உள்ளிட்ட கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

இது குறித்து இந்து முன்னணி சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டதன் பேரில், நேற்றுமுன்தினம் இரு தரப்பினரிடமும் தாலுக்கா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முடிவு எட்டப்படாத நிலையில் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது. கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், குமாரபாளையம் போலீசில் மீண்டும் இந்து முன்னணி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல ஆண்டு காலமாக ஹிந்து முஸ்லீம் மக்கள் சகோதரர்களாக பழகி வருகின்றனர். அதனால் இங்கு ஒரு மத ரீதியிலான சண்டைகள் வந்துவிடக்கூடாது என்று இப்பகுதி மக்கள் எண்ணுகின்றனர். அதனால் எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்வதே சமரசமான உறவுக்கு வழிவகுக்கும் என்கிறன்றனர் சமூக ஆர்வலர்கள். 

Tags:    

Similar News