அம்மன் நகர் சாலை அமைப்பதில் முரண்பாடா? சாலையில் திரண்ட பொதுமக்கள்..!
குமாரபாளையம் அம்மன் நகர் சாலை அமைப்பதில் முரண்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலையில் திரண்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.
அம்மன் நகர் சாலை அமைப்பதில் முரண்பாடா? சாலையில் திரண்ட பொதுமக்கள்
குமாரபாளையம் அம்மன் நகர் சாலை அமைப்பதில் முரண்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலையில் திரண்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.
குமாரபாளையம் அம்மன் நகர் சாலை குறுகலாக அமைப்பது குறித்து, அம்மன் நகர் பொதுமக்கள், அப்பகுதி கவுன்சியல்ர் தர்மராஜ், ஆகியோர் நகராட்சி தலைவர் விஜய்கண்ணனிடம் மனு கொடுத்து, வடிகாலை சாலை ஓரமாக அமைத்து, சாலையை அகலப்படுத்தி இருவழி சாலையாக போடுங்கள் என கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால், நேற்று அம்மன் நகர் பகுதியில் அகலம் குறைவான சாலையில் மீண்டும் சுருக்கி, வடிகால் அமைக்கும் பணி நடந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் சாலையில் திரண்டு, கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து சிறு சாயப்பட்டறை உரிமையாளர்கள் நல சங்க தலைவர் பிரபாகரன் கூறியதாவது:
இந்த சாலை மிக முக்கிய சாலை. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. நகராட்சி தலைவர் வசம் சொல்லியும், சாலையை மிக குறுகலாக அமைத்து, வடிகால் சாலை மத்தியில் வரும் படி கட்டுமான பணிகள் செய்து வருகின்றனர்.
இப்படி சாலை அமைத்தால், இந்த சாலையில் எந்த வாகனமும் போக முடியாது. தொழில் செய்வது மிகவு கடினமாகும். கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை கேட்டால், ஆணையாளர், பொறியாளர் சொற்படிதான் பணிகள் செய்வோம். நீங்கள் சொல்லும் பணியை செய்ய முடியாது என்கின்றனர்.
இந்த செயலை இப்பகுதி மக்கள் வன்மையாக கண்டிக்கிறோம். சாலை அகலப்படுத்தி, தார் சாலை அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் போராடுவது தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.