குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த கன மழையால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.;

Update: 2022-05-17 15:45 GMT
குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சி

குமாரபாளையத்தில் இன்று இரண்டு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

  • whatsapp icon

அக்னி நட்சத்திர கடும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் வெளியில் வரவே அஞ்சும் நிலை குமாரபாளையத்தில் இருந்து வருகிறது. சாலையோர வியாபாரிகள், கட்டுமான தொழிலாளர்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் என பலதரப்பட்ட மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை 04:00 மணியளவில் குளிர் காற்றுடன் கன மழை பெய்தது. இது இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை  நீடித்தது. இந்த மழையினால் கடும் வெப்பம் தணிந்து, பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News