பள்ளிபாளையத்தில் ரேஷன் பொருள் டோக்கன் வாங்க குவிந்த மக்கள்

ஒரே நேரத்தில் ரேஷன் பொருள் டோக்கன் பெற மக்கள் குவிந்ததால் விநியோகம் செய்ய முடியாமல் ஊழியர்கள் தவித்தனர்

Update: 2021-06-11 09:45 GMT

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழக அரசு இந்த மாதத்துக்கான ரேஷன் பொருளில் 13 வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் 2000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் அதற்கான டோக்கன் இன்று முதல் வீடுதோறும் வழங்கப்படுமென அறிவித்திருந்தது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், ஆவரங்காடு பகுதியில் 5 ரேஷன் கடைகள் ஒரே பகுதியில் செயல்பட்டு வருகின்றன.  பொது மக்களுக்கு நேரடியாக கொடுக்கும் வகையில் பிற்பகுதியில் டோக்கன் வழங்க நியாயவிலைக் கடை ஊழியர்கள் சென்றனர்.

அப்போது ஒரே நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடியதால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது. மேலும் டோக்கனை வாங்குவதற்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் நியாய விலை கடை ஊழியர்கள் டோக்கனை முறையாக விநியோகிக்க முடியாமல் தவித்துப் போயினர்.

அதன்பிறகு அங்கு விரைந்த காவல்துறையினர் கூட்டத்தினரை கட்டுப்படுத்திய பின்னர் பொதுமக்களுக்கு டோக்கன்களை ஊழியர்கள் விநியோகித்து சென்றனர். 

Tags:    

Similar News