உணவு தருவதில்லை என முன்னாள் அமைச்சரிடம் பொதுமக்கள் புகார்

குமாரபாளையத்தில் உணவு தருவதில்லை என முன்னாள் அமைச்சரிடம் பொதுமக்கள் புகார் கூறினர்.;

Update: 2022-09-01 12:45 GMT

குமாரபாளையம் அண்ணா நகர் பகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.

குமாரபாளையத்தில் உணவு தருவதில்லை என முன்னாள் அமைச்சரிடம் பொதுமக்கள் புகார் கூறினர்.

குமாரபாளையம் காவிரி வெள்ளபாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் தங்கமணி அண்ணா நகர் பகுதியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர்கள் கூறியதாவது:

நாங்கள் பாதுகாப்பு மையத்திற்கு போகவில்லை. தூங்க கூட முடிவதில்லை. அதனால் நிம்மதியாக தூங்க விடுங்கள் என்று வீட்டில் தங்கி உள்ளோம். உணவு தருகிறோம் என்று பலரும் கூறி செல்கின்றனர். ஆனால் யாரும் உணவு கொடுக்க வருவதில்லை. ஆடி மாதம் பிறந்தது முதல் மாதம் முடியும் வரை வெள்ளத்தால் கடும் துன்பத்திற்கு ஆளாகி விட்டோம். எங்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தாருங்கள். மின்சாரம் இல்லாமல் குழந்தைகளை வைத்துகொண்டு தூங்க கூட முடிவதில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தங்கமணி கூறியதாவது:

கட்சியினரிடம் கூறியுள்ளேன். நிலைமை சரியாகும் வரை உணவு வழங்குவார்கள். மின்வாரிய அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். அவர்கள் வந்து ஷாக் அடிக்கிறதா? என பார்த்து மின் இணைப்பு கொடுத்து விடுவார்கள். குடியிருப்புக்கு நிரந்தர தீர்வுக்கு மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு தங்கமணி பொதுமக்களிடம் கூறினார்.

நகர செயலர் பாலசுப்ரமணி, துணை செயலர் திருநாவுக்கரசு, கவுன்சிலர்கள் பழனிசாமி, புருஷோத்தமன், முன்னாள் கவுன்சிலர்கள் ரவி, அர்ச்சுனன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். நடராஜா திருமண மண்டபம், அண்ணா நகர், மணிமேகலை வீதி உள்ளிட்ட பல இடங்களை முன்னாள் அமைச்சர் தங்கமணி பார்வையிட்டார்.

Tags:    

Similar News