காலை முதல் மேக மூட்டம், வெயில் இல்லாததால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

குமாரபாளையத்தில் நேற்று காலை முதல் மேக மூட்டமாகவும், வெயில் இல்லாததாலும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.;

Update: 2024-08-16 09:15 GMT

காலை முதல் மேக மூட்டம், வெயில் இல்லாததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

குமாரபாளையத்தில் நேற்று காலை முதல் மேக மூட்டமாகவும், வெயில் இல்லாததாலும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஏப்ரல், மே மாத 15 ம் தேதி வரை, கடும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. அதன் பின் மழைக்காலம் வந்தது. கர்நாடக பகுதியில் கூட அதிக மழை பெய்ததால், காவிரியில் அதிக நீர்வரத்து ஏற்பட்டது. மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் தற்போது உபரியாக வரும் நீர் காவிரி ஆற்றில் முழுவதுமாக திறந்து விடப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளாக ஆடிப்பெருக்கு சமயத்தில் காவிரியில் நீர் இல்லாமல் வறண்ட நிலையில் இருந்தது. இந்த ஆண்டு இரண்டு லட்சம் கன அடி தண்ணீருக்கும் மேலாக வந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளாக மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடாத நிலையில், இந்த ஆண்டு ஆக. 1 முதல் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

சில நாட்களாக வெயில் இருந்த நிலையில், நேற்று காலை முதல் வெயில் இல்லாமலும், மேக மூட்டமாகவும் இருந்ததால், பொதுமக்கள் குளிர்ச்சியான சூழ்நிலையால் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News