குமாரபாளையத்தில் சேதமான குடிநீர் குழாய் சரி செய்ய பேவர் பிளாக் உடைப்பு

குமாரபாளையத்தில் சேதமான குடிநீர் குழாய் சரி செய்ய புதிதாக போடப்பட்ட பேவர் பிளாக் உடைக்கப்பட்டது.

Update: 2022-05-29 12:30 GMT

குமாரபாளையத்தில் சேதமான குடிநீர் குழாயை சரி செய்ய புதிதாக போடப்பட்ட பேவர் பிளாக் உடைக்கப்பட்டது.

குமாரபாளையம் சேலம் சாலையில் கத்தேரி பிரிவு முதல் காவேரி பழைய பாலம் வரை 2 கி.மீ. தூரத்திற்கு வடிகால் மற்றும் நடைபாதை 14 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது. நடைபாதையில் இரு புறமும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டன. சேலம் சாலை போலீஸ் ஸ்டேஷன் எதிரில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால், பேவர் பிளாக் கற்கள் அகற்றப்பட்டு சரி செய்யும் பணி நடைபெற்றது.

பணிகள் முடிந்து பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்படாமல் எடுக்கப்பட்ட மண் கொட்டப்பட்டு, சமன் செய்யப்பட்டுள்ளது. இது மழை வந்தால் கரைந்து, பள்ளம் ஏற்பட்டு விபத்துக்கு காரணமாக அமையும். மெத்தனமாக பணியை செய்த ஒப்பந்ததாரர் அல்லது பணியாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, மீண்டும் அதே இடத்தில் பேவர் பிளாக் கற்கள் அமைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும்என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News