குமாரபாளையத்தில் இருந்து பழனிக்கு பஸ் இயக்கப்படுமா? பயணிகள் கோரிக்கை
குமாரபாளையத்தில் இருந்து பழனிக்கு நேரடி பஸ் இயக்கப்படாததால், பயணிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.;
பொதுமக்கள், அன்மீக அன்பர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற, பழனி, திருப்பதி உள்ளிட்ட திருத்தலங்களுக்கு செல்வது வழக்கம். குமாரபாளையத்தில்இருந்து பழனி செல்ல அப்போதைய அமைச்சர் தங்கமணியிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன் பேரில், பழனிக்கு குமாரபாளையம் நகரில் இருந்து புறப்படும் வகையில் அனுமதி வழங்கினார். தினமும் 05:45 மணிக்கு குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வந்து, காலை 06:15 மணிக்கு புறப்படும். பிரதி கிருத்திகை, சஷ்டி, திங்கட்கிழமை ஆகிய நாட்களில் வழக்கமாக பழனிக்கு பெரும்பாலான ஆட்கள் சென்று வருகின்றனர்.
சில வாரங்களாக குடும்பத்துடன், தங்கள் குழந்தைகளுடன், பழனிக்கு எளிதாக சென்று வந்த பயணிகள், இந்த பஸ் வராததால் ஈரோடு சென்று பழனி சென்று வருகின்றனர். இது பொதுமக்களுக்கு சிரமமாக இருப்பதால் வழக்கம் போல் குமாரபாளையத்தில் இருந்து பழனிக்கு நேரடியாக பழனிக்கு பஸ்ஸை மீண்டும் இயக்கிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.