குமாரபாளையத்தில் நாடாளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
குமாரபாளையத்தில் நாட்டிற்கான எனது முதல் வாக்கு எனும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.;
குமாரபாளையத்தில் நாட்டிற்கான எனது முதல் வாக்கு எனும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப். 19ல் நடக்கவுள்ளது. அனைத்து அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். குமாரபாளையம் தாலுகா அலுவலக தேர்தல் பிரிவு சார்பில், வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு, ஓட்டுச்சாவடிகள் தயார் நிலையில் வைத்தல், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமித்தல், என்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
இதன் ஒரு கட்டமாக இந்த தேர்தலில் முதல் ஓட்டு போடும், நபர்களுக்காக, நாட்டிற்கான எனது முதல் வாக்கு எனும் தலைப்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி, குமாரபாளையம் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகன் பங்கேற்று, வாக்களிப்பது நம் கடமை, வாக்களிக்காமல் இருத்தல் கூடாது, அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வாக்களிப்பது நமது கடமை என்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இதில் பங்கேற்ற இளைஞர்கள் தேர்தலில் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
உதவி தாசில்தார் செல்வராஜ், ஆர்.ஐ. புவனேஸ்வரி, வி.ஏ.ஓ.க்கள் முருகன், செந்தில்குமார், தியாகராஜன், ஜனார்த்தனன், ரஞ்சித்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.