நடைமேடையில் வாகனங்கள் நிறுத்தம்: அதிகாரிகளின் எச்சரிக்கையால் அகற்றம்
குமாரபாளையத்தில் நெடுஞ்சாலை அதிகாரி ஆய்வால் ஆட்டோ பைனான்ஸ் டூவீலர்கள் நடைமேடையில் சீர்படுத்தப்பட்டன.;
குமாரபாளையம் -சேலம் சாலையில் சில நாட்கள் முன்பு நெடுச்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகள் அகற்றி, சரவணா தியேட்டர் பகுதியில் உள்ள ஆட்டோ பைனான்ஸ் உரிமையாளர்களிடம் நடைமேடை மீது டூவீலர்கள் நிறுத்தப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துச் சென்றனர்.
இந்நிலையில் அனைத்து ஆட்டோ பைனான்ஸ் கடைகள் முன்பு நடைமேடை மீது டூவீலர்களை நிறுத்தாமல் இருப்பதை காண முடிந்தது. இதே நிலை நீடித்தால் வாகன போக்குவரத்துக்கும், நடந்து செல்லும் பொதுமக்களுக்கும் உதவியாக இருக்கும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.