குமாரபாளையத்தில் பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்
குமாரபாளையத்தில் பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.;
குமாரபாளையத்தில் கும்பாபிஷேக தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது.
குமாரபாளையம் விட்டலபுரி பகுதியில் உள்ள விடோபா சமேத பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் சம்புரோஷனம் விழாவையொட்டி காவிரி ஆற்றிலிருந்து திருமஞ்சன தீர்த்தக்குடங்கள் எடுத்து வருதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. யானை மீது தீர்த்தக்குடம் ஏந்தியவாறு பக்தர் வர, ஜண்டை மேளங்கள் முழங்க ஏராளமான பெண்கள் தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்தனர். நேற்று மாலை முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.