குமாரபாளையத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழா

குமாரபாளையத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழா, விமரிசையாக நடைபெற்றது.

Update: 2021-12-22 10:15 GMT

குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா நகர், திருவள்ளுவர் நகர், வாசுகி நகரில் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தர்ராஜ பெருமாள் ஆலயத்தில் நூதன ஸ்ரீபஞ்சமுக மகாவீர ஆஞ்சநேயர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில்,  சிவாச்சாரியர்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் அபிஷேகம் செய்தனர். 

குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா நகர், திருவள்ளுவர் நகர், வாசுகி நகரில் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தர்ராஜ பெருமாள் ஆலயத்தில்,  நூதன ஸ்ரீபஞ்ச முக மகாவீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக சம்ப்ரோக்ஷன விழா,  கணபதி பூஜையுடன் துவங்கியது. டிச. 20 காலை 05:30 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யாகவாசனம், காலை 11:00 மணிக்கு,  காவேரி ஆற்றில் இருந்து தீர்த்தக் குடங்கள் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அன்று மாலை,  05:30 மணிக்கு வாஸ்து சாந்தி, மாலை 07:30 மணிக்கு, முதல்கால யாகசாலை பூஜை, டிச. 21 காலை 09:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், காலை 10:00 மணிக்கு கோபுர கலச பிரதிஷ்டை, மாலை 05:30 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடைபெற்றது.


நேற்று காலை 06:30 மணிக்கு,  நான்காம் கால யாகசாலை பூஜை, யாகசாலையில் இருந்து கும்ப கலசங்கள் புறப்பாடு, காலை 10:00 மணிக்கு மேல்,  மகா கும்பாபிஷேக விழா, 10:30 மணிக்கு மேல் ஸ்ரீபஞ்ச முக மகாவீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலை 04:00 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவை கணக்கம்பாளையம் பிரபு சிவம், ஆலய அர்ச்சகர் சந்தோஷ்சிவம் மற்றும் குழுவினர் நடத்தினர். கோவில் வளாகத்தில், கூடுதுறை சுவாமிநாத சிவாச்சாரியார் அருளாசி வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர்  செய்திருந்தனர்.

Tags:    

Similar News