விபத்து ஏற்படுத்தும் பள்ளிப்பாளையம் சாலை... சீரமைக்காததால் மக்கள் கவலை
விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள பள்ளிப்பாளையம் அக்ரகாரம் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், குமாரபாளையம் செல்லும் அக்ரகாரம் சாலையில் உள்ளது. இங்கு பஸ் நிறுத்துமிடத்தில், உள்ள பக்கவாட்டு சாலையானது குண்டும் குழியுமாக உள்ளது.
மோசமான சாலையால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். அவ்வப்போது பெய்யும் மழையினால் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி, இரவில் வரும் வாகனங்கள் பள்ளம் இருப்பதை அறியாமல், அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகின்றன.
எனவே, பழுதடைந்து பள்ளமாக உள்ள இந்த சாலையை உடனடியாக சீரமைத்து, விபத்து அபாயம் இல்லாத சூழலை உருவாக்கித் தருமாறு, பள்ளிபாளையம் நகராட்சிக்கும் நெடுஞ்சாலை துறைக்கும், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.