பள்ளிப்பாளையத்தில் இரட்டை இலக்கத்தில் கொரோனா தொற்று
பள்ளிப்பாளையத்தில் இன்று ஒரே நாளில், 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.;
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இன்று 12- பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் பகுதியில் இதுவரையிலும் 108- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இவர்களில் 3-பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் 45-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 60- நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னெப்போதும் இல்லாத அளவில் கடந்த இரண்டு தினங்களில் கொரோனா தொற்று நோயாளிகள் எண்ணிக்கை, பள்ளிப்பாளையத்தில் இன்று இரட்டை இலக்கத்தில் உயர்ந்ததால், மருத்துவ குழுவினர் கவலை அடைந்துள்ளனர்.