அதிகரிக்கும் கொரோனா தொற்று! பள்ளிபாளையம் முக்கிய வீதிகள் அடைப்பு

கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், பள்ளிபாளையத்தில் முக்கிய வீதிகள் அடைக்கப்பட்டுள்ளன.;

Update: 2021-05-12 00:31 GMT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் நேற்று ஒரே வீதியில் இரண்டுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மேலும் அங்கு உள்ள நபர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகம் மற்றும் மருத்துவக்குழுவினர் அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் வெளியாட்கள் யாரும் அந்தப் பகுதியில் செல்லாதவாறு, நேற்று மாலை பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட ராஜவீதி, ஆவாரங்காடு சாலையில் உள்ள சுபாஷ் நகர் உள்ளிட்ட முக்கிய வீதிகளில், மக்கள் நடந்து செல்லக்கூடிய வகையில் இடைவெளியுடன், தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள மக்களிடம் அங்கு குடியிருப்போரின் விபரத்தை மருத்துவக்குழுவினர் சேகரித்து வருகின்றனர். ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் உள்ள நிலையில்,  நேற்று ஏராளமான நபர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளதால் பள்ளிபாளையம் மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Tags:    

Similar News