பள்ளிபாளையம் வாரச்சந்தை கூடுவது எப்போது? வியாபாரிகள் எதிர்பார்ப்பு

பள்ளிபாளையம் புதன்சந்தை, ஆவரங்காடு சனி சந்தைகளை, மீண்டும் திறப்பதற்கு அனுமதிதர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2021-07-10 12:15 GMT

பள்ளிபாளையம் ஆவரங்காடு சனிசந்தை கூடுவதற்கு அனுமதி அளிக்கப்படாததால்

வெறிச்சோடி இருப்பதை படத்தில் காணலாம்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவாரங்காடு சனி சந்தை, மற்றும் அக்ரஹாரம் பகுதியில் செயல்படும் புதன்சந்தை என இரண்டு சந்தைகள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில்  கொரோனா பரவல் காரணமாக பள்ளிபாளையம் மாநகராட்சி நிர்வாகம், சந்தைகள் கூடுவதற்கு அனுமதி மறுத்தது.

இதனால் கடந்த சில வாரங்களாகவே சந்தை கூடாத நிலையில், தற்போது, தொற்று எண்ணிக்கை குறைவு காரணமாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் பழையபடி சமூக விலகலுடன், அரசின் விதிகளுடன் வாரச் சந்தைகள் கூடுவதற்கு பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என,  கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News