பள்ளிபாளையத்தில் சங்கரய்யாவின் 100-வது பிறந்தநாள் விழா

பள்ளிபாளையத்தில், மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவின் பிறந்தநாளை அக்கட்சியினர் விமரிசையாக கொண்டாடினர்.;

Update: 2021-07-15 08:45 GMT

பள்ளிபாளையம் அவரங்காடு சனிசந்தை பகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சங்கரய்யாவின் பிறந்தநாளை அக்கட்சியினர் கொண்டாடினர்.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்,சங்கரய்யாவின் நூறாவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியக்குழு சார்பில், இன்று பள்ளிபாளையம் ஆவாரங்காடு சனிசந்தை திடல் அருகே, சங்கரய்யா 100-வது பிறந்தநாள் விழா, செங்கொடியேற்றதுடன்  இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. அம்மாசிபாளையம், பாரதி நகர், அன்னை சத்யா நகர், காவேரி ஆர்.எஸ்., வ.உ.சி நகர், புதுப்பாளையம், ஆவாரங்காடு, அக்ராஹாரம், வசந்த நகர் ஆகிய. கட்சி கிளை பகுதிகளில் செங்கொடியேற்றி கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். அசோகன், தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் மோகன், கோவிந்தராஜ், ஒன்றியக்குழு செயலாளர் ஆர். ரவி, மற்றும் ஒன்றியக்குழு உறப்பினர்கள், கிளை செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News