பள்ளிபாளையத்தில் அடிதடி தகராறு: இருவர் மருத்துவமனையில் அனுமதி; 3 பேர் கைது
பள்ளிபாளையத்தில் முன்விரோதம் காரணமாக அடிதடியில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.;
பள்ளிபாளையம் ஓட்டமெத்தை பகுதியில் வசிப்பவர் குமரேசன், 28. கூலி தொழிலாளி. ஓட்டமெத்தை பகுதியில் பேக்கரி முன்பு நின்று கொண்டு இருந்தபோது, அங்கு வந்த 3 பேர் முன் விரோதம் காரணமாக குமரேசனிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதில் மூவரும் கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்த குமரேசன் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிபாளையம் போலீசார் நேரில் வந்து விசாரணை செய்ததில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஸ்டீபன்ராஜ், 26, சேகர், 30, பூவிழி ரங்கசாமி, 19, என்பது தெரியவந்தது. குமரேசன் தாக்கியதில் காயமடைந்த ஸ்டீபன்ராஜ் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து வழக்குபதிவு செய்து ஸ்டீபன்ராஜ், சேகர், பூவிழிராஜ், மூன்று பேரை கைது செய்த போலீசார், இருவரை நீதிபதியிடம் ஆஜர் செய்து, ஸ்டீபன்ராஜை பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.