பள்ளிபாளையத்தில் உழவர் சந்தை அமைப்பதற்கான இடங்கள் தேர்வு - அதிகாரிகள் ஆய்வு
பள்ளிபாளையத்தில், உழவர் சந்தை அமையவுள்ள இடங்கள் குறித்து அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தினர்.;
பள்ளிபாளையத்தில், உழவர் சந்தை அமைப்பதற்கான இடங்களை ஆய்வு செய்த வேளாண் அதிகாரிகள்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் பகுதியில், உழவர்சந்தை இதுவரையிலும் அமைக்கபடவில்லை. இந்நிலையில் பள்ளிபாளையம் சுற்றுவட்டார விவசாயிகள் பயன்பெறும் வகையில், பள்ளிபாளையம் ஆவரங்காடு , மற்றும் புதன் சந்தை பகுதியில், உழவர் சந்தை அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆய்வுப்பணியை, நாமக்கல் வேளாண்துறை அதிகாரிகள், பள்ளிபாளையம் வேளாண் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் இன்று மேற்கொண்டனர். உழவர் சந்தை அமைக்கப்பட்டால் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உழவர் சந்தை அமைக்கும் பணிகள் துரிதமாக தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.