பள்ளிபாளையம்:மத்திய அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
பள்ளிபாளையம் மத்திய அரிமா சங்கம்,எஸ்.பி.பி.சேரன் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.;
பள்ளிபாளையம் மத்திய அரிமா சங்கம், எஸ்பிபி சேரன் அரிமா சங்கங்களின் கலந்தாய்வு ஆலோசனை கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மத்திய அரிமா சங்க அலுவலகத்தில், பள்ளிபாளையம் மத்திய அரிமா சங்கம், எஸ்பிபி சேரன் அரிமா சங்கம் ஆகிய இரண்டு அமைப்புகளின் 2020, 2021 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு, நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சங்கத்தின் எதிர்கால நிகழ்வுகள் குறித்தும், அடுத்த கட்ட வளர்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக, இரண்டு அமைப்புகளின் சார்பிலும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிகழ்வில், 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.