பள்ளிபாளையம்: பேக்கரியில் கேஸ் சிலிண்டர் கசிவு: விபத்து தவிர்ப்பு

பள்ளிபாளையத்தில், பேக்கரியில் கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டது. எனினும் உரிய நேரத்தில் செயல்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.;

Update: 2021-07-07 15:00 GMT

பள்ளிபாளையம் பாலம் அருகே உள்ள பேக்கரியில் சிலிண்டர் கசிவை ஏற்பட்டதால்,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வந்த தீயணைப்புத்துறை வாகனம்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் - ஈரோட்டை  இணைக்கும் புதுப்பாலம் அருகே பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று கடையினுள் கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடை ஊழியர்கள் இதை கவனிக்காததால் தொடர்ந்து கசிவு ஏற்பட்ட நிலையில், இன்று மாலை எதிர்பாராதவிதமாக திடீரென சிலிண்டர் தீப்பிடித்துக் கொண்டது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கடையினுள் இருந்த வாடிக்கையாளர்கள் வெளியே சிதறி ஓடினர். இதன் பிறகு சுதாரித்த கடை ஊழியர்கள்,உரிமையாளர்கள் அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் இருந்த தீயணைப்பான் கருவியை கொண்டு எரிந்து கொண்டிருந்த சிலிண்டர் தீயை அணைத்தனர்.

முன்னெச்சரிக்கை நடவவடிக்கையாக வெப்படை செயல் அலுவலர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர், கடையை சுற்றிலும் தண்ணீரை பீச்சி அடித்து சிலிண்டரை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் யாருக்கும் பாதிப்பில்லை எனினும் பள்ளிபாளையம் பிரதான சாலையில் பேக்கரி ஒன்றில் கேஸ் கசிவு ஏற்பட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது..

Tags:    

Similar News