தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இன்று 6- பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள்ளது.
பள்ளிபாளையம் பகுதியில் இதுவரை 95- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கோவிட் தொற்றால் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 40-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 51- நபர்கள் சிகிச்சையில் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.